ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, May 27, 2020

ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது: அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறியதாவது:

ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. அவ்வாறு இணையவழி மூலம் பாடங்கள் எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும், பொதுமுடக்கத்தின் போது கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, கரோனா எதிரொலியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்க கால தாமதம் ஆகும் என்பதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் முதல் இணையவழி வகுப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தது.

 ஒரு சில தனியார் பள்ளிகள் ஏற்கெனவே ஒரு சில மணி நேரம் இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், மாணவர்கள் படிப்பதற்கு இணையவழி வகுப்புகள் உகந்த சூழலாக இருக்காது என அமைச்சர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

1 comment: