தமிழகம் முழுவதும் சலூன்கள் திறக்க அனுமதி! ஒரு இடத்தில் மட்டும் அனுமதி இல்லை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 22, 2020

தமிழகம் முழுவதும் சலூன்கள் திறக்க அனுமதி! ஒரு இடத்தில் மட்டும் அனுமதி இல்லை

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 50 நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் சலூன்கள் மூடியிருந்தன. பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும் சலூன்கள் திற்கக அனுமதி வழங்கப்படவில்லை

. இந்நிலையில் முடிதிருத்துவோர் சங்கத்தினர் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து ஊரகப் பகுதிகளில் சலூன் கடைககை திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் தற்போது சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர பிற இடங்களில் சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மாநகராட்சி, பேருராட்சி பகுதிகளில் சலூன் கடைகளை திறக்கலாம்.

 காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முடிதிருத்துவோர் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், கடையை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

No comments:

Post a Comment