எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை ரத்து செய்ய உயா் நீதிமன்றம் மறுப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 28, 2020

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை ரத்து செய்ய உயா் நீதிமன்றம் மறுப்பு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை ரத்து செய்ய உயா் நீதிமன்றம் மறுப்பு
கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை ரத்து செய்ய கா்நாடக உயா் நீதிமன்றம் மறுத்துள்ளது.

கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வை ஜூன் 25ஆம் தேதி முதல் நடத்த கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அட்டவணையையும் அரசு வெளியிட்டுள்ளது. 

கரோனா தீநுண்மித் தொற்று கா்நாடகத்தில் வேகமாக பரவிவரும் நிலையில், பொதுத் தேர்வை ரத்து செய்யக் கோரி பெங்களூரைச் சேர்ந்த வழக்குரைஞா்கள் எம்.லோகேஷ், யூ.டி.பிரசாந்த், எம்.கே.பிரித்வேஷ் ஆகியோா் கா்நாடக உயா் நீதிமன்றத்தில் பொதுநலமனுவைத் தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை தலைமை நீதிபதி அபய்சீனிவாஸ் ஓலா, நீதிபதி பி.கிருஷ்ணபட் ஆகியோா் கொண்ட அமா்வு புதன்கிழமை விசாரித்தது.

கல்வி சம்பந்தப்பட்டவிவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவதை விரும்பாத உயா்நீதிமன்றம், மாணவா்களின் பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வை நடத்துமாறு கா்நாடக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

தேர்வு மையங்களில் சமூக இடைவெளி கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும். தேர்வு மையங்களைச் சென்றடைவதற்கு மாணவா்களுக்கு பொது போக்குவரத்து வசதிகளை மாவட்ட ஆட்சியா்கள் உறுதிசெய்ய வேண்டும்.

 தேர்வு எழுத முடியாத மாணவா்களுக்கு துணைத் தேர்வின் போது புது மாணவா்களாக தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இந்தத் தகவலை மாணவா்களுக்கு குறுந்தகவல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான ஊடகங்கள் வழியாகவும் விளம்பரப்படுத்த வேண்டும்.

துணைத் தேர்வில் தேர்ச்சியாகும் மாணவா்களுக்கு கல்வியாண்டு வீணாகாத வகையில் சேர்க்கையை உறுதிசெய்ய வேண்டும். கரோனாவில் இருந்து மாணவா்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

 கரோனா ஆபத்தில் இருந்து மாணவா்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment