புதுடில்லி : 'ஜூம் ஆப்' எனப்படும் செயலியை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு, நான்கு வாரங்களுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
டில்லியைச் சேர்ந்த ஹர்ஷ் சக் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா வைரஸ் பிரச்னையால், ஊரடங்கு அமலில் உள்ளதால், பெரும்பாலான கருத்தரங்குகள், ஆலோசனை கூட்டங்கள், கல்வி தொடர்பான ஆலோசனை கூட்டங்கள், அமைச்சரவை ஆலோசனை, அதிகாரிகள் ஆலோசனை ஆகியவை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாகவே நடத்தப்படுகின்றன.
இதற்கு பெரும்பாலானோர், அமெரிக்க நிறுவனம் ஒன்றின், 'வீடியோ' தொழில்நுட்பமான, 'ஜூம்' எனப்படும் செயலியை பயன்படுத்துகின்றனர்.
இந்த செயலி மூலம், ஆலோசனை கூட்டங்களை நடத்துவது, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும். மேலும், தனி நபர் ரகசியம் மீறப்படுவதற்கும், இணைய குற்றங்கள், மிரட்டல், ஆபத்து அதிகரிப்பதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
இதை பயன்படுத்துவோருக்கு இணைய ரீதியலான பாதிப்புகள் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த செயலியை பயன்படுத்தும் நடைமுறை குறித்து ஆய்வு செய்து, முறையான சட்டம் இயற்றும் வரை, இதை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனுவுக்கு, நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்தி வைத்தனர்.

No comments:
Post a Comment