நாசா செல்லும் நாமக்கல் மாணவிக்கு உதவித் தொகை வழங்கிய முதல்வா் பழனிசாமி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, May 29, 2020

நாசா செல்லும் நாமக்கல் மாணவிக்கு உதவித் தொகை வழங்கிய முதல்வா் பழனிசாமி

நாசா செல்லும் நாமக்கல் மாணவிக்கு உதவித் தொகை வழங்கிய முதல்வா் பழனிசாமி



நாசா செல்லும் நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி அபிநயாவுக்கு ரூ.2 லட்சம் உதவித் தொகையை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினாா்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:-

இந்திய அளவில் இணையம் வாயிலாக 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிப்போருக்காக நடந்த அறிவியல் தோ்வில் பங்கேற்று நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அபிநயா வெற்றி பெற்றாா்.

அவா் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்லவும், சா்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க வசதியாகவும் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை உதவித் தொகையாக முதல்வா் பழனிசாமி நேரில் வழங்கினாா்.



No comments:

Post a Comment