அப்துல் கலாமை கௌரவிக்கும் வகையில், அவர் தங்கள் நாட்டுக்கு வருகை தந்த மே 26-ம் தேதியை தேசிய அறிவியல் நாளாக சுவிட்ர்லாந்து அறிவித்து பெருமை சேர்த்தது.
அணு விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதியை உலக மாணவர்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருந்தது.
அதற்கு ஒருபடி மேலே சென்று, சுவிட்சர்லாந்து அரசு, தங்கள் நாட்டுக்கு அப்துல் கலாம் வருகை தந்ததை நினைவு கூரும் வகையில், மே 26-ம் தேதியை அந்நாட்டின் தேசிய அறிவியல் நாளாக அறிவித்தது. அதன்படி, சுவிட்சர்லாந்தில் இன்று தேசிய அறிவியல் நாள்.
ஏவுகணை நாயகன் என்று புகழப்படும் அப்துல் கலாம் 2006ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க மே 26-ம் தேதி அங்குச் சென்றார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியத் தலைவர் ஒருவர் சுவிட்சர்லாந்து சென்றது அதுவே முதல் முறை என்பதால், அந்நாடு அதனை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.
அவரது வருகையைக் கௌரவிக்கும் வகையில், கலாம் தங்கள் நாட்டில் காலடி வைத்த நாளையே தேசிய அறிவியல் தினமாக அறிவித்து சிறப்பு சேர்த்தது சுவிட்சர்லாந்து.
அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்த அணு விஞ்ஞானி அப்துல் கலாமின் வாழ்வே, மிகப்பெரிய அனுபவப் பாடமாக அமைந்துள்ளது.
அவரை சிறப்பிக்கும் வகையில் 2010-ம் ஆண்டு அவரது பிறந்த தினத்தை உலக மாணவர்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment