'வேலை வாய்ப்புக்கான 'ஆன்லைன்' பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை
:மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகம் மூலம் நடத்தப்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து போட்டியாளர்கள் வீட்டில் இருந்தபடி, தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், கிராமப்புற மாணவர்கள் போட்டி தேர்வினை எளிதில் எதிர்கொள்ள, 'ஆன்லைன்' இணையதளம் வாயிலாக பயிற்சி அளிக்க உரிய வழிவகைகள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.அதன்படி,
http//tamilnaducareerservice.tn.gov.in
என்ற இணையதளத்தில் காணொளி வழி கற்றல் மின்னணு பாடமாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது. பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் வரும், 27ம் தேதி முதல், ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக துவங்க பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள், 0423~~2223346 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment