வயல்களுக்கு படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: விவசாயிகளின் புது ‘டெக்னிக்’ - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, May 26, 2020

வயல்களுக்கு படையெடுக்கும் வெட்டுக்கிளிகள்: விவசாயிகளின் புது ‘டெக்னிக்’

தங்களது வயல்களில் அதிகரித்து வரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, மத்தியப் பிரதேச விவசாயிகள் புதிய வழிமுறை ஒன்றைக் கையாண்டு வருகின்றனர்.

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் சில மாதங்களுக்கு முன்னால் வயல்வெளிகளில் வெட்டுக்கிளிகளின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் இருந்தது. அத்துடன் விளைச்சலுக்கும் அவை கடுமையான் சேதத்தை உண்டாக்கின. 


தற்போது பாகிஸ்தானுடன் எல்லைப்பகுதியில் இருக்கும் வடமாநிலங்களில் வயல்வெளிகளில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்தத் தாக்கமானது ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் குறிப்பாக செஹோர் மாவட்டத்தில் புத்னி மற்றும் நஸ்ருலாகஞ்ச் ஆகிய பகுதிகளில் தாக்குதல் அதிகமாக இருக்கிறது. 

இந்நிலையில் அதிகரித்து வரும் வெட்டுக்கிளிகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த, செஹோர் மாவட்ட விவசாயிகள் புதிய வழிமுறை ஒன்றைக் கையாண்டு வருகின்றனர்.


அதன்படி அவர்கள் கூட்டமாகக் கூடி பாத்திரங்களைத் தட்டி ஓசை  எழுப்புவதால் வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களை தடுக்கிறார்கள். அத்துடன் பயிர்கள் மற்றும் மரங்களில் கிருமிநாசினிக் கரைசல்களைத் தெளிப்பது உள்ளிட்ட வழக்கமான செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.                 

அவர்களது இந்த செயல்பாடுகளை மாநில வேளாண் விஞ்ஞானிகள் வெகுவாகப் பாராட்டுவதோடு தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment