ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, May 24, 2020

ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு

தமிழகத்தில், இரண்டு மாதங்களில் மட்டும், ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு, 4,736 ரூபாய் அதிகரித்துள்ளது.


இந்தியாவில், தங்க நகைகள் பயன்பாடு மற்றும் விற்பனையில், தமிழகம் முன்னணியில் உள்ளது. பாதுகாப்பான முதலீடாக, தங்கம் இருப்பதால், அதன் விலை உயர்ந்தாலும், மக்கள் வாங்கும் அளவை குறைத்து கொள்கிறார்களே தவிர, வாங்குவதை தவிர்ப்பதில்லை.


அதிகரிப்பு

தமிழகத்தில், மார்ச், 23ல், 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 3,952 ரூபாய்க்கும்; சவரன், 31 ஆயிரத்து, 616 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 40.50 ரூபாயாக இருந்தது.

அன்று முதல், தமிழக அரசின் உத்தரவை அடுத்து, அனைத்து நகை கடைகளும் மூடப்பட்டன. பின், அம்மாதம், 25 முதல், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

நகை கடைகள் மூடப்பட்டுள்ள நிலையிலும், சர்வதேச சந்தைக்கு ஏற்ப, உள்நாட்டில், தினசரி நிலவும் தங்கம் விலையை, பெரிய நகை நிறுவனங்கள், பொது மக்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றன.



தமிழகத்தில், தற்போது, வைரஸ் பாதிப்பு இல்லாத பகுதிகளில், சிறிய நகை கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. நேற்று, கிராம் தங்கம், 4,544 ரூபாய்; சவரன், 36 ஆயிரத்து, 352 ரூபாய்க்கும் விற்பனையானது.

இதையடுத்து, நேற்றுடன், இரு மாதங்கள் முடிந்த நிலையில், எப்போதும் இல்லாத வகையில், தங்கம் கிராமுக்கு, 592 ரூபாய்; சவரனுக்கு, 4,736 ரூபாயும் அதிகரித்துள்ளது.

சரிவு

இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது:பல நாடுகளில், கொரோனா வைரஸ் காரணமாக, தொழில்கள் முடங்கியுள்ளன. அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து வருகிறது.


அமெரிக்க பங்கு சந்தையில், சீனாவின், 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இருந்தன. தற்போது, அமெரிக்க பங்கு சந்தையில் இருந்து, சீன நிறுவனங்களை, அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது. இதனால், பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதுபோன்ற காரணங்களால், சர்வதேச முதலீட்டாளர்கள், மற்ற துறைகளில் முதலீடு செய்வதை தவிர்த்து, பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருவதால், அதன் விலை உயர்ந்துள்ளது. வரும் காலங்களில், தங்கம் விலை, மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்

No comments:

Post a Comment