அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழக அரசு முக்கிய உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, May 28, 2020

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழக அரசு முக்கிய உத்தரவு

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தமிழக அரசு முக்கிய உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் நீட் தேர்வுக்காக இணையவழியில் இலவச பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் இணையவழி பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. 

தனியார் பயிற்சி நிறுவனம் மூலம் 4 மணி நேரம் பயிற்சி வகுப்பும், 4 மணி நேரம் பயிற்சி தேர்வு என நடைபெற உள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் இன்று முதல் இணையவழியில் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

. ஜூலை 26ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் நிலையில் ஜூன் 15ம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் ஆன்லைன் வாயிலாக நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. 

தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் தேர்வுக்காக இந்த ஆண்டு பதிவு செய்துள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி ஆன்லைன் வாயிலாக அளிக்கப்பட இருக்கின்றது.

 ஆம்பிஸாப்ட் டெக்னாலஜி என்கின்ற தனியார் நிறுவனத்தின் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் நான்கு மணி நேரம் வீடியோக்கள் வாயிலாக பாடம் நடத்தப்படும். 

அதற்கடுத்த 4 மணி நேரம் மாணவர்களுக்குத் தேர்வுகள் வைக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.நடப்பாண்டில் 17,000 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். 

கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் இவர்களுக்கு ஆரம்பம் முதல் சரிவர பயிற்சி அளிக்கப்படவில்லை. இணையதளம் வழியாக சில மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு அதுவும் பிறகு நிறுத்தப்பட்டது. 

இந்த நிலையில், வரும் ஜூன் 15ம் தேதி முதல் ஆன்லைனில் குறுகிய கால பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஜூலை 26ம் தேதி தேர்வு நடக்கும் நிலையில், ஒரே ஒரு மாதம் நடத்தப்படும் இந்தக் குறுகிய கால பயிற்சி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு உரிய பயனளிக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி வழங்குவதற்கான விண்ணப்பப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ போன்ற போட்டித் தேர்வுகளுக்கு 2017-ம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

 அதன்படி நடப்புக் கல்வியாண்டுக்கான நீட் இலவசப் பயிற்சி வகுப்பு மார்ச் மாதம் தொடங்குவதாக இருந்தது.
இதற்கிடையே கரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அனைத்துப் பயிற்சி வகுப்புகளும் தள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில், நியூபாக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஜூன் 15-ம் தேதி முதல் அனைவருக்கும் இலவசமாக ஆன்லைன் மூலமாகப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 


தினந்தோறும் 4 மணி நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என்ற வகையில் பயிற்சி அளிக்கப்படும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான படிவம் இணையத்தில் தொடங்கியுள்ளது.


இதில் பயிற்சி பெற விரும்பும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள், 



 என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம். 

இதில் மாணவர்கள் பெயர், இ-மெயில், பள்ளி முகவரி, மாவட்டம் ஆகியவற்றோடு நீட் பதிவு எண்ணையும் குறிப்பிட வேண்டும். இந்த விண்ணப்பப் படிவம், ஜூன் 8-ம் தேதியோடு முடிவடைகிறது. பயிற்சி வகுப்புகள் ஜூன் 15-ம் தேதி முதல் தொடங்குகின்றன.

No comments:

Post a Comment