உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, May 23, 2020

உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை

உலகின் அதிக சம்பளம் வாங்கும் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையை ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா (22) பெற்றுள்ளார்.

2018 ம் ஆண்டு நடந்த அமெரிக்க டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸை தோற்கடித்ததன் மூலம் இவர் பிரபலமடைந்தார். இவர் கடந்த ஆண்டில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ 284 கோடி சம்பாதித்துள்ளார். 



1990ம் ஆண்டு முதல் டென்னிஸ் வீராங்கனைகளின் வருமானத்தை ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது. அதன்படி எந்த ஒரு விளையாட்டு வீராங்கனையும் ஒரே ஆண்டில் ரூ 284 கோடி சம்பாதித்ததில்லை. இதன் மூலம் இவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

2015ம் ஆண்டு ரூ 225 கோடி வருமானம் பெற்ற தடகள வீராங்கனை மரியா ஷரபோவாவின் சாதனையை இதன் மூலம் இவர் முறியடித்துள்ளார். 



நைக் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் விளையாட்டு வீராங்கனை நவோமி ஒசாகாவுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளதாக ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment