மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி கற்பிக்க கற்றல் உபகரணங்களை தயார் செய்யும் ஆசிரியை..! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, May 25, 2020

மாணவர்களுக்கு எளிதில் புரியும்படி கற்பிக்க கற்றல் உபகரணங்களை தயார் செய்யும் ஆசிரியை..!

பொது முடக்கத்தில் முடங்கிப் போய்விடாமல் பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு பாடம் நடத்த தயாராகி கொண்டிருக்கும் அரசு பள்ளி ஆசிரியர், கற்றல் கற்பித்தல் உபகரணங்களை தயார் செய்யும் பணியில் மும்முரம் காட்டி வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள குன்றத்தூரில் இயங்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார் தமிழாசிரியர் ஹேமலதா. பொதுவாக மாணவர்களுக்கு கரும்பலகை நோட்டுப் புத்தகங்கள் வாயிலாகத்தான் வகுப்புகள் எடுப்பது வழக்கம். 


ஆனால் தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளாக கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மூலமாக பாடங்கள் நடத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் 20 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் ஹேமலதா கடந்த 8 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருவதாக கூறுகிறார்.இந்த 8 ஆண்டுகளாகவும் தொடர்ந்து தன்னிடம் பயிலும் மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மூலமாகத்தான் பாடம் எடுப்பதாக தெரிவிக்கிறார். 

மற்ற முறைக்கும் இந்த முறைக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருப்பதாகவும் மாணவர்கள் உணர்ந்து கல்வியை படிப்பதாகவும் ஆசிரியர் ஹேமலதா தெரிவிக்கின்றார்

.பொதுமுடக்கம் முடிந்து பள்ளி ஆரம்பித்தவுடன் மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு தேவையான உபகரணங்களை தன்னுடைய வீட்டிலேயே செய்து தயார்செய்து காட்சிப்படுத்தி வைத்துள்ளார். மாணவர்களுக்கு எளிய முறையில் இலக்கணங்கள் புரியும் விதமாக பல்வேறு பதாகைகள் மற்றும் படங்களையும் வரைந்து ஆவணப்படுத்தி வருகிறார். 


இந்த ஆவணங்களுக்கு பெரிய அளவில் தொகை எதுவும் தேவைப்படவில்லை என்றும் பயன்படுத்த முடியாத உள்ள பொருட்களையே தான் பயன்படுத்தி வருவதாகவும் இந்த உபகரணங்களையெல்லாம் தான் சொந்தமாக தானே உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கிறார் ஆசிரியர் ஹேமலதா.


மேலும் அவர் கூறுகையில், "இலக்கணம் என்றால் மாணவர்களுக்கு ஒரு விருப்பப் பாடமாக மாற்றுவதே தன்னுடைய குறிக்கோள். தங்களுடைய பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு பாடங்களை நடத்துகிறோம்.

 நான் மட்டுமல்லாமல் என்னுடன் பணியாற்றும் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியரும் பெரிய அளவில் மாணவர்களுக்கு ஊக்கம் அளித்து வருகின்றனர். 

படங்கள் மூலமாகவும், காகிதத்தில் வரையப்பட்டு அழகுப் பொருட்களாக மாற்றப்பட்ட சிறு சிறு கதைகள் மூலமாகவும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கிறோம். மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதோடு அவற்றின் பொருள் உணர்ந்து அவர்கள் படிப்பதற்கு இந்த முறை இலகுவாக இருக்கும்.


பள்ளியை சார்ந்திருக்கிற பகுதியில் உள்ள பெற்றோர்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளிகள். அதனால் பிள்ளைகளின் பாடம் கற்கும் முறை எளிமையாக்கப் படவேண்டும், அவர்களுடைய கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தன்னுடைய சொந்த செலவில் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்."எனத் தெரிவித்தார்.

ஆசிரியராக மட்டுமல்லாமல் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்து பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளார் ஹேமலதா. இவரின் கற்றல் திறமையை பாராட்டி தமிழக அரசு அவருக்கு விருது வழங்கி இருப்பதாகவும் பெருமையுடன் தெரிவிக்கிறார் ஆசிரியர் ஹேமலதா.

No comments:

Post a Comment