இணைய தலைமுறை - 2020’ பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்: பல துறைகளின் அறிஞர்கள் உரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, July 25, 2020

இணைய தலைமுறை - 2020’ பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்: பல துறைகளின் அறிஞர்கள் உரை

இணைய தலைமுறை - 2020’ பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்: பல துறைகளின் அறிஞர்கள் உரை
இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம், புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து ‘இணைய தலைமுறை – 2020’எனும் பயிற்சி வகுப்பை நடத்துகின்றன. 

இந்த வகுப்புகள் நாளை(ஜூலை 27) தொடங்கி, 31-ம்தேதி வரை 5 நாட்களுக்கு ‘zoom’தளத்தில் நடைபெற உள்ளன.இதில் அனைவரும் பங்கேற்கலாம். பங்கேற்புக் கட்டணம் கிடையாது. பயிற்சி வகுப்புகள் காலை 11 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும்.

இதில் முதல் நாள் (ஜூலை 27) பயிற்சியில் அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் சொ.சுப்பையா, ‘கல்வி எனும் கலங்கரை விளக்கம்’ என்றதலைப்பிலும், 2-ம் நாள் (ஜூலை 28) சென்னையை சேர்ந்த உளவியல் ஆலோசகர் எஸ்.கல்யாணந்தி, ‘ஜாலியா ஒரு சைக்காலஜி’ என்றதலைப்பிலும்,

 3-ம் நாள் (ஜூலை 29) வருமானவரித் துறை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார், ‘தோல்விகளால் ஒரு வேள்வி’ என்றதலைப்பிலும், 4-ம் நாள் (ஜூலை 30) எழுத்தாளரும், ஆசிரியருமான சிகரம் சதீஷ்குமார், ‘நில் கவனி வெல்’ என்ற தலைப்பிலும், 5-ம் நாள் (ஜூலை 31) கவிஞர் தங்கம் மூர்த்தி, ‘நலம் நலம் அறிய ஆவல்’என்ற தலைப்பிலும் உரையாற்று கின்றனர்.

இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான zoom ID – 227 061 8029. Password – SVM123. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9994119002 என்ற செல்போன் எண்ணில் தொடர்புகொள்ளலாம். ‘இந்து தமிழ் திசை’, கல்வியாளர்கள் சங்கமம், புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்துகின்றன

No comments:

Post a Comment