மாணவிக்கு செருப்பு வாங்க ரூ.2 ஆயிரம் வழங்கிய கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகளை நேற்று மாவட்ட கலெக்டர் கந்தசாமி தொலைபேசி மூலமாக கேட்டறிந்தார். மேலும் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பப்பட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

இதற்கிடையே மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் கந்தசாமி பெற்று கொண்டிருந்தார்.
அப்போது தண்டராம்பட்டு அருகில் உள்ள கீழ்வணக்கம்பாடியை சேர்ந்த மாணவி, தான் கல்லூரியில் சேர எஸ்.டி. சாதி சான்று வேண்டி மனு அளித்தார். அப்போது மாணவி செருப்பு அணியாமல் இருந்தார்.
இதை கண்ட கலெக்டர், மாணவியிடம் செருப்பு ஏன் அணியவில்லை என கேட்டார். செருப்பு அறுந்துவிட்டது என்று கூறினார். அதைத்தொடர்ந்து கலெக்டர் கந்தசாமி, மாணவியிடம் செருப்பு வாங்கிக்கொள்ள ரூ.2 ஆயிரம் வழங்கினார். கலெக்டரின் இந்த செயலை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

No comments:
Post a Comment