30 விநாடியில் கொரோனா கண்டறியும் புதிய கருவி
கொரோனாவை 30 விநாடியில் கண்டறிய உதவும் புதிய ரேபிட் டெஸ்ட் கிட் உருவாக்கும் முயற்சி இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் இக்கருவி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவை 30 விநாடியில் கண்டறிய உதவும் புதிய ரேபிட் டெஸ்ட் கிட் உருவாக்கும் முயற்சி இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. விரைவில் இக்கருவி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரிசோதனையை துரிதப்படுத்தும் விதமாக புதிய ரேபிட் டெஸ்ட் கிட் உருவாக்கும் முயற்சியில் இந்தியா, இஸ்ரேல் இணைந்து செயல்படுகிறது. இது தொடர்பாக இஸ்ரேல் தூதரகம் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும்
இந்தியாவின் தலைமை விஞ்ஞானி விஜய் ராகவனுடன் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவினர் இணைந்து இக்கருவியை தயாரித்து வருகின்றனர். இந்த ரேபிட் டெஸ்ட் கிட் 30 விநாடிகளில் கொரோனாவை கண்டறியக் கூடியது’ என கூறப்பட்டிருந்தது.
இந்த கருவி தொடர்பான இறுதிகட்ட பரிசோதனைகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக, இஸ்ரேல் விஞ்ஞானிகள் குழு நேற்று சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தது.
கொரோனா பரிசோதனையில் புதிய ரேபிட் டெஸ்ட் கிட் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
No comments:
Post a Comment