5,000 ஆசிரியர்கள் பட்டியலை அனுப்ப CEO உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, July 26, 2020

5,000 ஆசிரியர்கள் பட்டியலை அனுப்ப CEO உத்தரவு

5,000 ஆசிரியர்கள் பட்டியலை அனுப்ப CEO உத்தரவு
கல்வித்துறையின் அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த 5 ஆயிரம் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


 இதையடுத்து, பணியில் சேர்ந்த பிறகு பட்டப்படிப்பு படித்த ஆசிரியர்களின் பட்டியல்களை தொடக்க கல்வித்துறை கேட்டுள்ளது.

 பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தாங்கள் பணியில் சேர்ந்த பிறகு முதுநிலை பட்டம் பெற்றால் அவர்களுக்கு சம்பளத்துடன் ஊக்க ஊதியம் சேர்த்து வழங்கப்படும்.

இதன்படி ஒரு ஆசிரியருக்கு ஊக்க ஊதியமாக ரூ.1000 முதல் ரூ.2000 வரை வழங்கப்படும்.

இதை கருத்தில் கொண்டு, தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயர்கல்வியை முடித்துள்ளனர்.

இதுகுறித்து, தொடக்க கல்வித்துறைக்கு தெரியப்படுத்தினார்களாக இல்லையா, அனுமதி பெற்றார்களா இல்லையா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

 இதையடுத்து, மேற்கண்ட ஆசிரியர்கள் பட்டம் பெற்றதை பின் தேதியிட்டு ஏற்க முடியாது என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் நில்லாமல் தொடக்க கல்வித்துறையின் அனுமதி இல்லாமல் பட்டப் படிப்பு படிப்பது தவறு. எனவே மேற்கண்ட ஆசிரியர்கள் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தொடக்க கல்வித்துறையின் உத்தரவின் அடிப்படையில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தற்போது களம் இறங்கியுள்ளனர்

. மாவட்ட வாரியாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதால் தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தொடக்க கல்வித்துறையின் அனுமதி இல்லாமல் பட்டம் முடித்துள்ள ஆசிரியர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல்களை உடனடியாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தொடக்க கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment