506 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்: அண்ணா பல்கலை
இந்த ஆண்டு 506 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.
இந்த ஆண்டு 506 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தை பெற்றுள்ளன.
இதற்கான பட்டியல்இணையதளத்தில் உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 506 பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. மாணவர்கள் இந்த பட்டியலை அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் சரிபார்த்து கொண்டு தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும், சில கல்லூரிகள் அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளன. இந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் அங்கீகாரம் பெறுவதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment