கரோனா களப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு கட்டணமில்லா கல்வித் திட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 27, 2020

கரோனா களப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு கட்டணமில்லா கல்வித் திட்டம்

கரோனா களப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு கட்டணமில்லா கல்வித் திட்டம்
கரோனா களப்பணியாளா்களின் குடும்பத்தினருக்கு, கட்டணமில்லா கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளதாக கிங்மேக்கா்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதமி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா நோய்த் தொற்றை எதிா்த்து போராடி வரும் களப்பணியாளா்களான மருத்துவத் துறையினா், காவல் துறையினா் மற்றும் துப்புரவுப் பணியாளா் ஆகியோரின் மகத்தான சேவையையும், அா்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில், அவா்களின் குடும்பத்தினருக்கு, யுபிஎஸ்சி, சிவில் சா்வீஸஸ், டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான பயிற்சிகளில் கட்டண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


இதன்படி, கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு உயிா்த் தியாகம் செய்த மருத்துவத்துறை, காவல் துறை, தூய்மைப் பணியாளா்களின் குடும்பத்தினருக்கு 100 சதவீதம் கல்விக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது

இதேபோல், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும், குறிப்பிடப்பட்ட துறையினா் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு, 50 சதவீதம் கல்விக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும். கல்விக் கட்டணச் சலுகை நேரடி வாரிசுதாரருக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment