தமிழகத்தில் தரமற்ற இன்ஜினியரிங் கல்லூரிகளா? அண்ணா பல்கலைக் கழகம் விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 27, 2020

தமிழகத்தில் தரமற்ற இன்ஜினியரிங் கல்லூரிகளா? அண்ணா பல்கலைக் கழகம் விளக்கம்

தமிழகத்தில் தரமற்ற இன்ஜினியரிங் கல்லூரிகளா? அண்ணா பல்கலைக் கழகம் விளக்கம்
தமிழகத்தில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் தரமற்ற கல்லூரிகள் என்ற பட்டியல் ஏதும் வெளியிடவில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் தற்போது அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 500 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சமூக வலைத் தளங்களில்  89 தரமற்ற பொறியியல் கல்லூரிகள் இருப்பதாக அண்ணா பல்கலைக் கழகம் பட்டியல் வெளியிட்டுள்ளதாக செய்தி உலா வந்தது. இந்த தகவலால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பல மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தரமற்ற கல்லூரிகள் குறித்து விசாரித்து வருகின்றனர்

. இதன் காரணமாக தற்போது அண்ணா பல்கலைக் கழகமே முன்வந்து, தரமற்ற கல்லூரிகள் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

 சமூக வலைத்தளங்களில் அண்ணா பல்கலையில் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் 89 கல்லூரிகள் தரமற்றது என்றும் அவற்றின் பெயர், ஏனைய தகவல்களை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. 

அண்ணா பல்கலைக் கழகம் தனது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் இது போன்ற தரமற்ற கல்லூரிகள், தரமான கல்லூரிகள் என்ற பாகுபாடு செய்யவில்லை. 89 கல்லூரிகளின் பெயர்ப் பட்டியல் குறித்த தகவல்களை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment