ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, July 27, 2020

ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம்

ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம்
கொரோனா பாதிப்பு காலத்தில் ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காலத்தில் ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான ஓய்வூதிய பட்டுவாடா உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியங்கள் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, தாமதமின்றி, ஓய்வு பெறும் தினத்திலேயே ஓய்வூதிய பட்டுவாடா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அலுவலக பணிகள் தற்போது தடைபட்டுள்ளன. வழக்கமான ஓய்வூதியம் வழங்க, ஓய்வூதியப் பட்டுவாடா உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, தற்காலிக ஓய்வூதியம் மற்றும் தற்காலிகப் பணிக்கொடை தடையின்றி வழங்க விதிமுறைகள் தளர்த்தப்பட உள்ளது.

இதன்படி, ஓய்வுபெறும் நாளிலிருந்து 6 மாதங்கள் வரை அல்லது தவிர்க்க முடியாத பட்சத்தில், ஓராண்டு வரை தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும். பணிநிறைவு ஓய்வு மட்டுமின்றி, விருப்ப ஓய்வு மற்றும் அடிப்படை விதி 56-ன் கீழ் ஓய்வு பெறுவோருக்கும் இந்த நடைமுறைகள் பொருந்தும்” என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment