பி.பார்ம், ஆர்கிடெக்ட் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ அனுமதி தேவையில்லை என அறிவிப்பு
பி.பார்ம், ஆர்கிடெக்ட் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ அனுமதி தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பார்மசி கல்லூரிகள் இந்திய பார்மசி கவுன்சிலிடம் அனுமதி பெற வேண்டும். ஆர்கிடெக்ட் கல்லூரிகள் இந்திய கட்டிடக்கலை கவுன்சிலிடம் அனுமதி பெற வேண்டும்.
179 கல்லூரிகள் நிரந்தரமாக மூடப்பட்டதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு அறிவித்துள்ளது. 164 புதிய கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்று ஏ.ஐ.சி.டி.இ தெரிவித்துள்ளது.
கலை, அறிவியல், பொறியியல், கணினி அறிவியல் படிப்புகளின் பட்டதாரி மற்றும் முதுகலை மாணவர்களின் கீழ் பல்கலைக்கழக மானிய ஆணையம் (UGC) மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ - AICTE) வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த ஆண்டு நடைபெறவிருந்த செமஸ்டர்களுக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கொரோனா (COVID-19) காலத்தில் கல்லூரிகளில் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆராய பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) பரிந்துரைகளின் அடிப்படையில் தேர்வுகள் குறித்து முடிவெடுக்க தமிழ் மாநில அரசு ஒரு உயர் மட்டக் குழுவை அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment