மரக்கன்று நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஆசிரியர்
காரியாபட்டி:கடுமையான வெயில், மழையின்மை, சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு முக்கிய காரணம் போதிய மரங்கள் இல்லாததே. மரம் வளர்க்க விழிப்புணர்வு ஏற்பட்டு சமூக ஆர்வலர்கள் பலர் முன்வந்திருப்பது சற்று ஆறுதலான விஷயம் தான்.
பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டாலும் அரசு அலுவலகங்களில் மரக்கன்றுகளை நட வேண்டும்,
அதை முறையாக பராமரிக்க வேண்டும் என்கிற சமூக அக்கறையால், மரமும் மனிதனும் எனும் அமைப்பை உருவாக்கி, இரண்டு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து பலரையும் ஊக்கப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாத்து வருகிறார் தமிழாசிரியர் முஹம்மது ஆஸிம்.
இவர், பள்ளிகளில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து, மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
விடுமுறையை பயனுள்ளதாக்கி காரியாபட்டி நகரை பசுமையாக மாற்ற நீர்வளங்களை அதிகரிக்கக்கூடிய மரக்கன்றுகளான அத்தி, மகிழம்பூ, இலுப்பை, அரசமரம், இச்சி மரம் உள்ளிட்டவைகளை அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நட்டு வருகிறார்.
வருங்கால சந்ததியினருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார். இப்பகுதியில் தூய்மையான காற்று கிடைக்கும், சுற்றுச்சூழல் மேம்படும் என்ற நம்பிக்கை துளிர்விட்டுள்ளது.

No comments:
Post a Comment