IRCTC ePayLater: பணம் இல்லாமலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!!
ரயில் பயணத்திற்காண உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் பணம் இல்லாமல் முன்பதிவு செய்யப்படும்... IRCTC-யின் இந்த 'சிறப்பு' திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்...
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் (IRCTC) தக்கல் டிக்கெட்டுகளுக்காக ePayLater உடன் இணைந்து 'புக் நவ், பே லேட்டர்' சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ePayLater என்பது அர்த்தசாஸ்திர ஃபிண்டெக் பிரைவேட் லிமிடெட் (Arthashastra Fintech Pvt. Ltd.,) வழங்கும் டிஜிட்டல் கட்டண தீர்வாகும்
இதன் மூலம் திட்டத்தின்படி பயணிகள் தங்களுடைய பயணத்திற்கேற்ற டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துவிட்டு அதன் பின்னர் 14 நாட்கள் கழித்து பணத்தை செலுத்தி கொள்ளலாம். அதற்கும் மேல் கால தாமதம் ஆனால் 3.5% வட்டியுடன் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தட்கல் முன்பதிவு வசதி பயணிகளை ஒரு குறுகிய அறிவிப்பில் அவசரகால முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. AC முன்பதிவுகளுக்கான தட்கல் டிக்கெட்டுகள் பயணத் தேதியைத் தவிர்த்து, பயண தேதிக்கு 24 மணி நேரத்திற்கு முன் காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கு திறக்கப்படுகின்றன.
IRCTC-யின் 'Book Now, Pay Later' திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது:
1. முதலில் IRCTC இணையதளத்தை ஓப்பன் செய்து அதில் லாகின் செய்து உங்கள் பயண விபரம் குறித்து குறிப்பிட வேண்டும்.
2. அதன் பின்னர் பயணம் செய்பவர்களின் விபரங்களை குறிப்பிட்டு, பேமெண்ட் ஆப்சனுக்கு வரவேண்டும்.
3. அதில் 'பே ஆன் டெலிவரி' அல்லது 'பே லேட்டர்' என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். இது 'இபே' என்பதில் இருக்கும்.
IRCTC இணையதளத்தில் லாகின் செய்தவுடன் உங்கள் பயணம் குறித்த தேதி, ஊர் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தவுடன் அதன் பின் நீங்கள் பயணம் செய்யும் ஊருக்கு எத்தனை ரயில்கள் உள்ளது என பார்க்க வேண்டும். பின்னர் உங்கள் செளகரித்திற்கு ஏற்ற ரயிலை தேர்வு செய்து பயணிகள் விபரத்துடன் டிக்கெட்டை புக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் 'கேப்ட்சாவை' எண்டர் செய்து பின்னர் பணம் செலுத்தும் பகுதிக்கு வரவேண்டும். அதில் நெட்பேங்கிங், கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட், வாலட், பே ஆன் டெலிவரி என பல ஆப்சன்கள் இருக்கும். அதில் பே ஆன் டெலிவரியை தேர்வு செய்து பின்னர் அதற்கு கீழ் உள்ள பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
அதன் பின்னர் 'மேக் பேமெண்ட்' என்ற ஆப்சன் தோன்றும். அதனை க்ளிக் செய்தால் அந்த பக்கம் 'இபே' என்ற அடுத்த பக்கத்திற்கு அழைத்து செல்லும். அதன்பின்னர் உங்களுடைய மொபைலுக்கு ஒரு ஓடிபி எண் வரும். அந்த எண்ணை நீங்கள் பதிவு செய்தவுடன் உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படும். நீங்கள் பயணம் செய்து முடித்த பின்னர் டிக்கெட் புக் செய்த 14 நாட்கள் கழித்து பணம் செலுத்தினால் போதும்.
பயனர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதில் குறைந்த தாமதத்தை எதிர்கொள்வதையும் கட்டண நுழைவாயில் தோல்விகளைத் தவிர்ப்பதையும் உறுதிசெய்கிறது.
IRCTC-யின் கூற்றுப்படி, 14 நாட்களுக்குள் பணம் செலுத்தத் தவறினால், ஆண்டுக்கு 36% என்ற விகிதத்தில் அபராத வட்டி மற்றும் சில சந்தர்ப்பங்களில் டிக்கெட் ரத்து மற்றும் / அல்லது பயனர் கணக்கு செயலிழப்பு ஏற்படலாம்.

No comments:
Post a Comment