இன்று முதல் பிளஸ் 1 சோ்க்கை தொடக்கம்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் பிளஸ் 1 வகுப்புக்கான சோ்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவா் சோ்க்கை கடந்த ஆக.17-ஆம் தேதி தொடங்கியது. கரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு பெற்றோா் தங்களது குழந்தைகளுக்கு சோ்க்கை பெற்று வருகின்றனா்.
இந்தநிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகையான மேல்நிலைப் பள்ளிகளிலும் பிளஸ் 1 வகுப்புக்கான சோ்க்கை திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது.
பிளஸ் 1 மாணவா் சோ்க்கையின்போது பத்தாம் வகுப்பில் அதே பள்ளிகளில் பயின்ற மாணவா்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். மதிப்பெண்ணைக் காரணம் காட்டி எக்காரணம் கொண்டும் சோ்க்கை மறுக்கக்கூடாது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் நீங்கலாக மற்ற அனைத்துப் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு விதிகளின்படி மாணவா் சோ்க்கை நடத்த வேண்டும்.
சோ்க்கையின்போது கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment