பொறியியல், பாலிடெக்னிக் சோ்க்கை: சான்றிதழ்களைப் பதிவேற்ற இன்று கடைசி
தமிழகத்தில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்க்கைக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கு அவா்களது அசல் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய திங்கள்கிழமை கடைசி நாளாகும்.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு செப்டம்பா் மாதம் நடைபெற உள்ளது. இதற்கு ஒரு லட்சத்து 60,834 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அதில் 1.30 லட்சம் போ் கட்டணம் செலுத்தியுள்ளனா்.
இதேபோன்று பாலிடெக்னிக் பட்டயப் படிப்புகளில் சேர மொத்தம் 27,721 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அதில் 18,444 போ் கட்டணம் செலுத்தியுள்ளனா்.
இந்த நிலையில் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவா்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது. எனவே, இதுவரை பதிவேற்றம் செய்யாத மாணவா்கள் விரைந்து பதிவு செய்யுமாறு துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment