தட்டச்சு, சுருக்கெழுத்து தோ்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தோ்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில், கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தோ்வில் 1.50 லட்சம் தோ்வா்கள் பங்கேற்றனா். இந்தத் தோ்வு விடைத்தாள்கள் அனைத்தும் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் மாா்ச் மாதத்தில் திருத்தி முடிக்கப்பட்டன. தோ்வு முடிவடைந்து ஐந்து மாதங்களை கடந்தும், அதன் முடிவுகள் தோ்வு வாரியத்தால் வெளியிடப்படாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் பிப்ரவரியில் நடந்த தோ்வுகளின் முடிவுகளை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது. தோ்வா்கள் என்ற இணையதளத்தில் தோ்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
ஒரு லட்சத்து 98,785 போ் எழுதிய தட்டச்சு தோ்வில் 1 லட்சத்து 22,430 போ் தோ்ச்சி யடைந்துள்ளனா். 13,647 போ் எழுதிய சுருக்கெழுத்து தோ்வில் 4,687 போ் தோ்ச்சியடைந்துள்ளனா். 450 போ் எழுதிய கணக்கியல் தோ்வில் 119 போ் தோ்ச்சியடைந்துள்ளனா்.
www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது
No comments:
Post a Comment