மலர் மாலை, கிரீடம், பழத்தட்டுடன் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வரவேற்பு
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியத்தில் உள்ள நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மலர் மாலை, கிரீடம், பழத்தட்டுடன் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது.
கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் சற்று தணியத் தொடங்கி யுள்ள நிலையில், முதல்கட்டமாக பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகளுக்கு மட்டும் அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் 1, 6, 9-ம் வகுப்புகளுக் கான மாணவர் சேர்க்கை நேற்று தொடங்கியது
கடலாடி ஒன்றியம் நரசிங்கக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. முதலாம் வகுப்பில் புதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கு மாலை அணிவித்து, கிரீடம் சூட்டி, பழத்தட்டு கொடுத்து வரவேற்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் கிறிஸ்து ஞானவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. இடைநிலை ஆசிரியர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.
திண்டுக்கல் மாவட்ட அரசுப் பள்ளிகளிலேயே தனிச் சிறப்புடன் விளங்குவது அம்மையநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. இங்கு தமிழ், ஆங்கில வழிக்கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. மாவட்டத் திலுள்ள அரசு தொடக்க பள்ளிகளி லேயே அதிகமாக 380 மாணவர்கள் இந்தப் பள்ளியில் பயில்கின்றனர்.
இந்நிலையில் நேற்று அரசு உத் தரவையடுத்து முதலாம் வகுப்புக் கான மாணவர்கள் சேர்க்கை தொடங் கியது. அம்மையநாயக்கனூர் மற் றும் இதன் சுற்றுப்புறக் கிராம மக்கள் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில் சேர்க்க முன்வந்தனர்.
முதல்நாளே 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தனர். பள்ளியின் சிறப்பை அறிந்த 15-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் தனியார் பள்ளிகளில் பயின்ற தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தனர்.
நடப்புக் கல்வியாண்டில் முதலா வதாகச் சேர்ந்த மாணவருக்கு தலைமையாசிரியர் ஆர்தர் மற்றும் ஆசிரியர்கள் மாலை அணிவித்து வரவேற்றுப் பாடப்புத்தகங்களை வழங்கினர். ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பள்ளிதான் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையில் முதலிடம் வகிக்கிறது.
No comments:
Post a Comment