21 அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்குப் பதவி உயர்வு: கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் இடமாற்றம்.
தமிழகத்தில் 21 அரசு கலைக் கல்லூரி முதல்வர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், கிரேடு-1 முதல்வர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உயர் கல்வித்துறைச் செயலர் அபூர்வா பிறப்பித்துள்ள ஆணை விவரம்:
விழுப்புரம் அரசுக் கல்லூரி முதல்வர் என்.ரமா, சென்னை ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராகவும், சீர்காழி எம்ஜிஆர் அரசுக் கல்லூரி முதல்வர் டி.லட்சுமி, கிருஷ்ணகிரி அரசுக் கல்லூரி முதல்வராகவும், மாதனூர் அரசுக் கல்லூரி முதல்வர் பி.உமா மகேஷ்வரி, சென்னை குயின் மேரீஸ் கல்லூரி முதல்வராகவும், குடவாசல் அரசுக் கல்லூரி முதல்வர் டி.ராஜேந்திரன், நிலக்கோட்டை அரசுக் கல்லூரி முதல்வராகவும், குமாரபாளையம் அரசு கல்லூரி முதல்வர் ஜி.கண்ணன், கிருஷ்ணகிரி அரசுக் கல்லூரி முதல்வராகவும், அவிநாசி அரசுக் கல்லூரி முதல்வர் பி.எஸ். விஜயலட்சுமி, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசுக் கல்லூரி முதல்வராகவும், குமாரபாளையம் அரசுக் கல்வியியல் கல்லூரி முதல்வர் வி.கலைச்செல்வி, கோவை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநராகவும், ஆண்டிப்பட்டி அரசுக் கல்லூரி முதல்வர் எஸ்.கே.கல்யாணி, உடுமலை அரசுக் கல்லூரி முதல்வராகவும், கடலாடி அரசுக் கல்லூரி முதல்வர் வி.அனுராதா, திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
வேலூர் அரசுக் கல்வியியல் கல்லூரி முதல்வர் பி.கே.கிள்ளிவளவன், தருமபுரி அரசுக் கல்லூரி முதல்வராகவும், கோவை அரசுக் கல்வியியல் கல்லூரி முதல்வர் டி.பால் கிரேஸ், ராமநாதபுரம் ராஜா சேதுபதி அரசுக் கல்லூரி முதல்வராகவும், கோவில்பட்டி அரசுக் கல்லூரி முதல்வர் ஆர்.ரவிச்சந்திரன், குளித்தலை அரசுக் கல்லூரி முதல்வராகவும், பல்லடம் அரசு கல்லூரி முதல்வர் எம்.ஆர். எழிலி, திருப்பூர் எல்ஆர்ஜி அரசுக் கல்லூரி முதல்வராகவும், லால்குடி அரசுக் கல்லூரி முதல்வர் டி.ரோஸி, கும்பகோணம் அரசுக் கல்லூரி முதல்வராகவும், புதுக்கோட்டை அரசுக் கல்லூரி முதல்வர் ஏ.குணசேகரன், பரமக்குடி அரசுக் கல்லூரி முதல்வராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
நாகர்கோவில் அரசுக் கல்லூரி முதல்வர் வி.கிருஷ்ணன், திருப்பூர் சிக்கண்ணா அரக்சு கல்லூரி முதல்வராகவும், மணல்மேடு அரசுக் கல்லூரி முதல்வர் கே.துரையரசன், கும்பகோணம் அரசுக் கல்லூரி முதல்வராகவும், நிலக்கோட்டை அரசுக் கல்லூரி முதல்வர் ஏ.மலர், வேலூர் அரசுக் கல்லூரி முதல்வராகவும், சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜி.கிருஷ்ணன், சென்னை மாநிலக் கல்லூரி முதல்வராகவும், பெரும்பாக்கம் அரசுக் கல்லூரி முதல்வர் என்.கலைவாணி, செய்யாறு அரசுக் கல்லூரி முதல்வராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் சி.ஜோதி ராமலிங்கம், தருமபுரி மண்டலத்துக்கும், கும்பகோணம் அரசுக் கல்லூரி முதல்வர் பி. சிந்தைசெல்வி, தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி முதல்வராகவும், கோவை மண்டல இணை இயக்குநர் பி.பொன்முத்துராமலிங்கம், மதுரை மண்டலத்துக்கும், திண்டுக்கல் எம்விஎம் அரசுக் கல்லூரி முதல்வர் சி.லதா பூரணம், திருநெல்வேலி மண்டல இணை இயக்குநராகவும், திருச்சி மண்டல இணை இயக்குநர் டி.அறிவுடைநம்பி, மன்னார்குடி அரசுக் கல்லூரி முதல்வராகவும், மதுரை மண்டல இணை இயக்குநர் ஆர்.பாஸ்கரன், சுரண்டை காமராஜ் அரசுக் கல்லூரி முதல்வராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல கிருஷ்ணகிரி அரசுக் கல்லூரி முதல்வர் ஆர்.ஆர்.ஜெயந்தி, சிவகங்கை அரசுக் கல்லூரி முதல்வராகவும், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசுக் கல்லூரி முதல்வர் ஆர்.சுமதி, வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசுக் கல்லூரி முதல்வராகவும், விழுப்புரம் அரசுக் கல்லூரி முதல்வர் என்.ராமலட்சுமி மற்றும் சிக்கண்ணா கல்லூரி முதல்வர் சி.வி.தீபா ஆகியோர் சென்னை மண்டல இணை இயக்குநர்களாகவும், திருச்சி அரசுக் கல்லூரி முதல்வர் ஏ.மேகலா, திருச்சி மண்டல இணை இயக்குநராகவும், கிருஷ்ணகிரி அரசுக் கல்லூரி முதல்வர், திருச்சி அரசுக் கல்லூரி முதல்வராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் அரசுக் கல்லூரி முதல்வர் டி.கணேசன், விழுப்புரம் அரசுக் கல்லூரி முதல்வராகவும், குளித்தலை அரசுக் கல்லூரி முதல்வர் கே.மாரியம்மாள், லால்குடி அரசுக் கல்லூரி முதல்வராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்''.
No comments:
Post a Comment