ஏழை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மறுப்பு: 45 தனியார் பள்ளிகளுக்கு சம்மன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, September 21, 2020

ஏழை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மறுப்பு: 45 தனியார் பள்ளிகளுக்கு சம்மன்

 ஏழை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மறுப்பு: 45 தனியார் பள்ளிகளுக்கு சம்மன்


பொருளாதார ரீதியாக நலிவுற்றப் பிரிவு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை அளிக்க மறுத்த 45 தனியார் பள்ளிகளுக்கு டெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அழைப்பாணை அனுப்பி ஆஜராக உத்தரவிட்டுள்ளது.


ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகள் கடந்த ஏப்ரல் முதல் புத்தகங்களை அளிக்க மறுத்து வருகிறது என்று டெல்லி குழந்தைகள் உரிமை ஆணையத்துக்கு புகார் மேல் புகார்கள் வந்து கொண்டிருந்தன.


இதனையடுத்து இந்த விவகாரத்தை கையில் எடுத்த குழந்தைகள் ஆணையம் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளை அழைத்து விசாரித்ததில் வழிக்கு வந்தன, புத்தகங்களை அளிப்பதாக உறுதியளித்தன.


கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், இலவசமாக அவர்களுக்கு ஆரம்பக் கல்வி, புத்தகங்கள் வழங்க வேண்டும்.


டெல்லியில் விதிகளின் படி பொருளாதார ரீதியாக நலிவுற்றோர் மற்றும் வசதியற்ற ஏழைகள் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட மாணவர்களு இலவசப் பாடப்புத்தகங்கள். எழுதுபொருள், சீருடை ஆகியவற்றை அளிக்க வேண்டும். அரசு இந்தத் தொகையை பள்ளிகளுக்கு அளித்துவிடும்


அரசாங்கத்திடமிருந்து தொகையைப் பெற முடியும் எனும்போதே ஏழை மாணவர்கள் ஒதுக்கப்படுகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்

No comments:

Post a Comment