பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 50 சதவீத பள்ளிகள் திறப்பு
மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, பல்வேறு கட்டுப்பாடுகளுடன், ஆந்திரா, பஞ்சாப், அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில், 50 சதவீத பள்ளிகள், நேற்று திறக்கப்பட்டன.
மத்திய அரசின் நான்காம் கட்ட தளர்வுகளின் படி, 9 முதல், 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நேற்று முதல், பள்ளிகளை ஓரளவு துவங்க அனுமதி வழங்கப்பட்டது.
கட்டாயமில்லை
எனினும், மாநில அரசுகள், இதில் இறுதி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்வது கட்டாயமில்லை; விரும்பும் மாணவர்கள் செல்லலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆந்திர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், அசாம், மிசோரம், நாகலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களிலும், சண்டிகர், ஜம்மு ~ காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களிலும், 50 சதவீத பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.
அசாமில், அனைத்து அரசு பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன.
முதல்கட்டமாக, அடுத்த, 15 நாட்களுக்கு, வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளை திறப்பது குறித்து, அதன் நிர்வாகங்கள் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில், வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு வெளியே இயங்கும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடத்தில் சந்தேகம் இருந்தால், பள்ளிக்கு சென்று, ஆசிரியர்களிடம் சந்தேகத்தை தெளிவு படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிருமி நாசினி
டில்லி, குஜராத், கேரளா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கர்நாடகா, பீஹார் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில், பள்ளிகள் திறக்கப்படவில்லை.
பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமி நாசினி பயன்படுத்துவது, பெற்றோரிடம் இருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறுவது போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment