பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
கோத்தகிரி வட்டாரத்தில் 'சமக்ரா சிக்சா' (ஒருங்கிணைந்த பள்ளி கல்வி) சார்பில், பள்ளி செல்லா குழந்தைகள், பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிய கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
வரும், 10ம் தேதி வரை நடைபெறும் இப்பணியில், முக்கியமாக, பழங்குடியின மாணவர்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து, இடம்பெயர்ந்த குழந்தைகளை கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவக்குமார் தலைமையில், கணக்கெடுக்கும் பணிநடக்கிறது.
No comments:
Post a Comment