100 க்கும் மேற்பட்ட ஆன்லைன், திறந்தநிலைப் படிப்புகள்: யுஜிசி தொடக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 26, 2020

100 க்கும் மேற்பட்ட ஆன்லைன், திறந்தநிலைப் படிப்புகள்: யுஜிசி தொடக்கம்

 100 க்கும் மேற்பட்ட ஆன்லைன், திறந்தநிலைப் படிப்புகள்: யுஜிசி தொடக்கம்


இளநிலை மற்றும் முதுநிலைப் பிரிவுகளில் 100க்கும் மேற்பட்ட ஆன்லைன், திறந்தநிலைப் படிப்புகளை யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.


பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் இயங்கும் கல்வி தொடர்புக்கான கூட்டமைப்பில் (CEC) இந்தப் புதிய படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பொறியியல் அல்லாத இளநிலை மற்றும் முதுநிலைப் பாடப் பிரிவுகள் ஆகும்.


இதற்காக மத்திய அரசின் ஸ்வயம் தளத்தில் 78 இளநிலை மற்றும் 46 முதுநிலை பாடப்பிரிவுகள் (Massive Online Open Courses- MOOCS) தொடங்கப்பட்டுள்ளன.


டெல்லி பல்கலைக்கழகம், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உட்பட யுஜிசியின் கீழ் இயங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் முழு நேரம் மற்றும் பகுதி நேரமாகப் படிக்கும் மாணவர்கள், இந்தப் படிப்புகளின் மூலம் கூடுதல் தகுதியைப் பெறுவர். பிற மாணவர்களும் இவற்றைப் படிக்கலாம்.


இந்த ஆன்லைன் படிப்புகளை முறைப்படுத்தி, மாணவர்களை வழிநடத்த நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment