ஊரக திறனறிவு தேர்வு எழுதவுள்ள 1600 மாணவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி:CEO அறிவிப்பு
மதுரையில் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஊரக திறனறிவு தேர்வு எழுதவுள்ள 1600 மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளிக்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் சி.இ.ஓ., சுவாமிநாதன் தலைமையில் நடந்தது.
தேர்வு ஒருங்கிணைப்பாளர் தென்கரை முத்துப்பிள்ளை, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் ரகுபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சி.இ.ஓ., கூறியதாவது: 9ம் வகுப்பு மாணவர்கள் ஜன.,24ல் இத்தேர்வு எழுதுகின்றனர்.
தற்போது பள்ளி விடுமுறை என்பதால் தேர்வில் இடம் பெறும் கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், திறனறிவு பகுதிகளை கற்பிக்க ஒவ்வொரு 100 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் குழு ஏற்படுத்தி ஜன.,31 முதல் வெபினார் செயலி மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
55 ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். தேர்ச்சி பெறுவோர் ஒன்பது முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ரூ.ஆயிரம் கல்வி உதவித்தொகை பெறுவர் என்றார்.
No comments:
Post a Comment