மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான 2வது கலந்தாய்வு விரைவில் துவங்கும்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான இரண்டாவது கலந்தாய்வு விரைவில் துவங்கும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சிடிஸ்கேன் கருவியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கொரோனா ஆர்டிபிசிஆர் சோதனை நாள் ஒன்றுக்கு 70 ஆயிரம் வரை எடுக்கப்படுகிறது.
புதிய வகையான வைரஸ் குறித்து பொதுமக்கள் பதற்றமும், பீதியடையவும் வேண்டாம். தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 2வது கலந்தாய்வு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
கலந்தாய்வு முழுவதுமாக முடிந்தவுடன் வகுப்புகள் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment