கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள்: டிச.31-க்குள் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்குவதற்கு டிச.31-ஆம் தேதிக்குள் கல்லூரிகள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் செயல்படும் கல்லூரிகள், சென்னை பல்கலைக்கழக இணைப்பில் செயல்படுகின்றன.
இந்தக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை மற்றும் புதிய வகுப்புகள், பாடப்பிரிவுகளைத் தொடங்குவதற்கு பல்கலைக்கழகத்தின் அனுமதியைப் பெற வேண்டும்
அந்த வகையில், வரும் கல்வியாண்டுக்கான அனுமதி பெறுவதற்கு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட தேதிக்கு பின்னா் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment