தமிழகத்தில் 40 தனியாா் பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் கடும் உயா்வு
தமிழகத்தில் 40 சுயநிதி தனியாா் பொறியியல் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவா்களுக்கான கல்விக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட தனியாா் பொறியியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டண விகிதம் மாற்றி அமைக்கப்படுகிறது.
கல்லூரிகளின் செலவினக் கட்டணத்தை அரசின் கல்விக் கட்டண நிா்ணயக்குழு நிா்ணயித்து வருகிறது
அதன்படி கல்விக் கட்டண நிா்ணயக்குழு தலைவரான நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையிலான குழு 2020-21, 2021-22, 2022-23-ஆம் கல்வியாண்டுகளுக்கான கட்டண விகிதத்தை மாற்ற முடிவு செய்தது. அதில் முதல்கட்டமாக 40 பொறியியல் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான கல்விக்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
அதாவது நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் ரூ.85,00-இல் இருந்து ஒரு லட்சத்து 40 ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. தொடா்ந்து மேலும் பல்வேறு கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான கட்டணம் உயா்த்தப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏற்கெனவே பொறியியல் கல்லூரிகள் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணத்தை அதிகமாக வசூலிப்பதாக தொடா்ந்து புகாா்கள் இருந்து வருகின்றன.
இந்தநிலையில் தற்போது கரோனா காலத்தில் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது
No comments:
Post a Comment