8ம் வகுப்பு மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்' தேர்வு அறிவிப்பு
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய கல்வி உதவித்தொகை தேர்வு, பிப்., 21ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் உஷாராணி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ ~ மாணவியருக்கு உதவித்தொகை வழங்குவதற்கான, தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புஉதவித் தொகைக்கான, என்.எம்.எம்.எஸ்., தேர்வு, பிப்., 21ல் நடக்கிறது. இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.
எனவே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், தங்கள் மாணவர்களுக்கு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வழங்க வேண்டும்.
பின், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று, இன்று முதல் ஜனவரி, 8க்குள் அனுப்ப வேண்டும். இந்த தகவல்களை, முதன்மைக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், தங்கள் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment