தேசிய திறனாய்வு தேர்வு : ஒரே மாவட்டத்தில் 908 மாணவர்கள் ABSENT
கோவை மாவட்டத்தில் நேற்று நடந்த, தேசிய திறனாய்வு தேர்வில், 908 மாணவர்கள் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர்.
தமிழகம் முழுக்க, தேசிய திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. பத்தாம் வகுப்பு மாணவர்கள் மட்டும் பங்கேற்ற இத்தேர்வு, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெறுவோருக்கு, ஆய்வு படிப்புகள் வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். கோவை மாவட்டத்தில், இத்தேர்வு 72 மையங்களில் நடந்தது. ஆயிரத்து 915 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
ஆனால், 908 மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. மனத்தேர்வு, படிப்பறிவு தேர்வு என இரு பிரிவுகளாக நடந்த இத்தேர்வை, 6 ஆயிரத்து ஏழு மாணவர்கள் எழுதினர்.அனைத்து தேர்வு மையங்களிலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எந்த புகாருக்கும் இடமளிக்காமல் தேர்வு நடந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
We want quick link for join SMC training.
ReplyDelete