'வங்கி விவரங்களை தெரிவிக்க வேண்டாம்': ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 22, 2020

'வங்கி விவரங்களை தெரிவிக்க வேண்டாம்': ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை

 'வங்கி விவரங்களை  தெரிவிக்க வேண்டாம்': ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை


'பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப பெற பயணியர் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டாம்' என ரயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.


தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:


பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப பெற பயணியரிடம் வங்கி கணக்கு விவரங்களை ரயில்வே நிர்வாகம் ஒரு போதும் தொலைபேசி வாயிலாக கேட்பதில்லை. மோசடி கும்பலைச் சேர்ந்த சிலர் இதுபோன்ற தகவல்களை தொலைபேசி வாயிலாக கேட்பதாக புகார்கள் வருகின்றன. 



ரயில்பயணியர் மற்றும் பொதுமக்கள் தொலைபேசி வாயிலாக வங்கி ஏ.டி.எம்.கார்டு, கிரெடிட் கார்டு எண்கள், வங்கி பின் எண்கள், ஏ.டி.எம்., பாஸ்வேர்டு ஆகியவைகளை தெரிவிக்க வேண்டாம். 


இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக இணையதளத்தின் மூலம் பதிவு செய்த பயணச்சீட்டுகளுக்கான கட்டணத்தொகை பயணம் ரத்தாகும் போது பயணியருடை வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.


ரயில்வே ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்படும் பயணச்சீட்டுக் கான கட்டணம் உரிய காலக் கெடுவில் ரயில்வே ஸ்டேஷன்களில் திரும்ப வழங்கப்படுகிறது. எனவே தனிநபர் வங்கி கணக்கு சம்பந்தமான விஷயங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டியதில்லை. 


இந்த தகவல்களை யாராவது தொலைபேசியில் கேட்டால், இது குறித்து ரயில்வே பயணியர் உதவி தொலைபேசி எண், 138 ல்புகார் செய்யலாம்.இவ்வாறு கூறியுள்ளது.

No comments:

Post a Comment