பணி நிரந்தரம் செய்ய ஆசிரியர்கள் முதல்வருக்கு 'டுவீட்'
தமிழகம் முழுக்க அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்கள், தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட கலைப்பாடம் கையாள, வாரத்தில், மூன்று ~ அரை நாட்கள் பள்ளிக்கு வர வேண்டும். மாதம், 7,700 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.
கடந்த, 2012ல் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு இதுவரை ஊதியம் உயர்த்தப்படவில்லை. பி.எப்., போனஸ், மகப்பேறு விடுப்பு, இ.எஸ்.ஐ., மருத்துவ காப்பீடு எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை.
பகுதிநேர ஆசிரியர்கள் கூறுகையில், 'எங்களின் கோரிக்கையை முதல்வரின்நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக, முதல்வரின் டுவிட்டர் கணக்கிற்கு, ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் மனு அனுப்பி வருகிறோம்.
அதில், '2012ம் ஆண்டு தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இடம் பெற்றுள்ளது' என்றனர்.
No comments:
Post a Comment