தமிழ் புலமையில் சாதனை படைத்த தமிழக சிறுவன்: இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தார் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 22, 2020

தமிழ் புலமையில் சாதனை படைத்த தமிழக சிறுவன்: இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தார்

 தமிழ் புலமையில் சாதனை படைத்த தமிழக சிறுவன்: இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்தார்


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த 8 வயது சிறுவன் தமிழ் புலமையில் சாதனை படைத்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வின்னர் விருது பெற்றுள்ளார்.


திருப்பத்தூர் அஞ்சலக வீதியைச் சேர்ந்த தம்பதி ஜெயச்சந்திரன், இந்திரா பிரியதர்ஷினி. இவர்களது மகன் மிதுன்வர்ஷன் (8) அங்குள்ள குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்று வருகிறார்.


ஆங்கிலவழியில் பயின்றாலும், அவருக்கு தமிழ் கற்கும் திறன் அதிகமாக இருந்தது. இதை அறிந்த அவரது பெற்றோர், சிறுவயதில் இருந்தே தமிழ் இலக்கியங்களை படிக்கப் பயிற்சி அளித்தனர்.


இந்நிலையில் இடைவிடாது அவர் 109 அவ்வையார் பாடல்கள் , 110 பாரதியார் பாடல்கள், 99 தமிழ் குறிஞ்சி மலர்கள் பெயர்களை ஒப்புவிக்கிறார்.


அவரது சாதனையைப் பாராட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வின்னர் நிறுவனம் விருது வழங்கியுள்ளது. அச்சிறுவனை பள்ளி ஆசிரியர்கள், தமிழார்வலர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment