ஐ.ஐ.டி., வாரணாசியில் இஸ்ரோ கல்வி மையம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 23, 2020

ஐ.ஐ.டி., வாரணாசியில் இஸ்ரோ கல்வி மையம்

 ஐ.ஐ.டி., வாரணாசியில் இஸ்ரோ கல்வி மையம்


ஐ.ஐ.டி. வாரணாசியில் விண்வெளித் துறைக்கான பிராந்திய கல்வி மையத்தை திறக்க இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது.


உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஐ.ஐ.டி. தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ இடையே நேற்று ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.


 இஸ்ரோவின் திறன் மேம்பாட்டு திட்ட அலுவலகத்தின் இயக்குனர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் ஐ.ஐ.டி. வாரணாசியின் இயக்குனர் பேராசிரியர் பிரமோத் குமார் ஜெயினும் அதில் கையெழுத்திட்டனர்.


இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது


:விண்வெளித் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் வாரணாசியில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்துடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது.


இந்த ஒப்பந்தத்தின்கீழ் ஐ.ஐ.டி. வாரணாசியில் விண்வெளித் துறைக்கான பிராந்திய கல்வி மையம் திறக்கப்படும். பி.டெக். மற்றும் எம்.டெக். மாணவர்களுக்காக குறுகிய கால கல்வி திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும்.


இதேபோல் பி.எச்.டி.க்கான நீண்ட கால ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கல்வித் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படும். விண்வெளித் துறையில் அறிவாற்றலை வலுபடுத்தும் வகையில் மாநாடுகள் கண்காட்சிகள் உள்ளிட்டவற்றிற்கு ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.


அப்போது பிரமோத் குமார் ஜெயின் கூறுகையில்“உத்தர பிரதேசம் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் விண்வெளி தொழில்நுட்ப நடவடிக்கைகளை ஊக்குவிப்பதில் இந்த விண்வெளித் துறைக்கான பிராந்திய கல்வி மையம் முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

No comments:

Post a Comment