வாகன சான்றுகளை புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
வாகன சான்றுகளை புதுப்பிக்க, அடுத்தாண்டு மார்ச் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தாண்டு பிப்., முதல், ஜூன் வரையில் காலாவதியாகும் வாகன சான்றுகளை, ஜூன் மாதத்துக்குள் புதுப்பிக்கும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அவகாசம் வழங்கியது.பின், அந்த அவகாசம், இம்மாதம், 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வாகன உரிமங்களை புதுப்பிக்க காத்திருப்பதைத் தவிர்க்கவும், கொரோனா பரவலை கட்டுக்குள் வைக்கவும், புதிய உத்தரவை, மத்திய சாலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்தாண்டு, பிப்., முதல், அடுத்தாண்டு மார்ச், 31ம் தேதி வரை காலாவதியாகும் வாகன உரிமங்களை, புதுப்பித்ததாகவே கருத வேண்டும்.
உரிமங்களை புதுப்பிக்காத வாகனங்கள் மற்றும் உரிமையாளர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இதை, அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச போலீஸ் துறை மற்றும் போக்குவரத்து துறை கடைப்பிடிக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment