முதல்வர் தனிப்பிரிவில் மனு கொடுத்தோருக்கு வேலை
முதல்வரின் தனிப்பிரிவில் மனு செய்தவர்களுக்கு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வேலைவாய்ப்பு தொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
இதையடுத்து, விண்ணப்பித்தவர்களின் கல்வி தகுதி அடிப்படையில், தனியார் துறையில் வேலைவாய்ப்பு வழங்க, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்கள், கடந்த, 14 முதல், 24ம் தேதி வரை நடத்தப்பட்டன. வேலைக்கு ஆள் எடுக்கும் தனியார் நிறுவனங்களும், வேலைவாய்ப்பு கேட்டு விண்ணப்பித்தவர்களும் பங்கேற்றனர்.
இதில், 361 பேர் தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றனர்; 506 பேர் திறன் பயிற்சிக்கும், 33 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அரசின் வழிகாட்டுதல் பெற்று, 190 பேர் சுய வேலைவாய்ப்பு மேற்கொள்ள விரும்பினர். வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் வீரராகவ ராவ் நியமன உத்தரவுகளை வழங்கினார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment