நூல்களை பதிப்பிக்க நிதியுதவி
தமிழில் கருத்தாழமிக்க, அரிய கலை நூல்களை பதிப்பிக்க, அரசின் உதவித் தொகை பெற, ஜன., 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில், கலை சார்ந்த நூல்களை எழுதும் நூலாசிரியர்களை ஊக்கப்படுத்த, கருத்தாழமிக்க அரிய தமிழ் நூல்களை பதிப்பிக்க, நுால் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் வீதம், ஐந்து நூல்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழியே நிறைவேற்ற, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நூலாசிரியர்கள், தமிழில் கருத்தாழமிக்க கலைகள் சார்ந்த நூல்களை பதிப்பிக்க, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க, ஜன., 29 கடைசி நாள். விண்ணப்ப படிவம் பெற, நிபந்தனைகளை அறிந்து கொள்ள, 'உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை -- 28' என்ற முகவரியிலும், 044 -- 2493 7471 என்ற, எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment