பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை உயர்வு
நான்கு கோடிக்கும் அதிகமான பட்டியிலின மாணவர்கள்,10~ஆம் வகுப்பிற்குப் பின் கல்வியைத் தொடர்வதற்கு வழங்கப்படும் உதவித் தொகையை ஐந்து மடங்கு உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
பட்டியலின மாணவர்கள், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின், உயர் கல்வியை தொடர்வதற்காக, மத்திய அரசு, 'போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்' என்ற கல்வி உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு, 1,100 கோடி ரூபாய், ஒதுக்கப்பட்டு வந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம், டில்லியில் நடந்தது.
இதில், பட்டியல் பிரிவு மாணவர்கள், 10ம் வகுப்புக்கு பின் உயர் கல்வியைத் தொடர்வதற்காக, மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர, ஒப்புதல் அளிக்கப்பட்டது
.பட்டியிலின மாணவர்களின் உயர் கல்விக்காக, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த, 1,100 கோடி ரூபாயை, ஐந்து மடங்குக்கும் மேல் உயர்த்தி, 6,000 கோடி ரூபாயாக வழங்க, கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நான்கு கோடிக்கும் அதிகமான பட்டியலின மாணவர்கள், 10~ம் வகுப்பிற்குப் பின் கல்வியைத் தொடரும் வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், 59 ஆயிரம் கோடி ரூபாயை கல்வி உதவித் தொகையாக வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதில், 60 சதவீத தொகையான, 35 ஆயிரத்து,534 கோடி ரூபாய், மத்திய அரசு நிதியில் இருந்தும், மீதமுள்ள தொகை மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படும்.
டி.டி.எச்., என்படும், வீட்டிற்கு நேரடியாக, 'டிவி' ஒளிபரப்பு வழங்கும் சேவையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கான புதிய வழிமுறைகளுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 'டி.டி.எச்., உரிமம் இனி, 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உரிமம் கட்டணம் வசூலிக்கப்படும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment