CBSE தேர்வு குறித்து மத்திய கல்வி அமைச்சர் புது தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 26, 2020

CBSE தேர்வு குறித்து மத்திய கல்வி அமைச்சர் புது தகவல்

 CBSE தேர்வு குறித்து மத்திய கல்வி அமைச்சர் புது தகவல்


2021-ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள் தேதி டிசம்பர் 31-ம் தேதி மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன் மாணவர்களுடன் உரையாடிய ரமேஷ் பொக்ரியால், சிபிஎஸ்இ பள்ளிகள் பல கிராமப்புறங்களில் இருப்பதால் ஆன்லைன் தேர்வுகள் சாத்தியமில்லை” என்றார். எனவே 2021 சிபிஎஸ்இ போர்டு தேர்வுகள் அனைத்தும் எழுத்து வடிவத்தில்தான் இருக்குமே தவிர ஆன்லைன் தேர்வுகள் கிடையாது என்று ரமேஷ் பொக்ரியால் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment