தேர்வில் முறைகேடு தடுக்க புதிய நடைமுறை : TNPSC தலைவர் தகவல்
''டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் முறைகேடுகளை தடுக்க, ஜி.பி.எஸ்., லாக் உள்ளிட்ட புதிய நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என, தேர்வாணைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி பிரீக்ஸ் பள்ளி தேர்வு மையத்தை ஆய்வு செய்த டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பாலசந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது
:மாநிலம் முழுவதும் ஜன.,3ல், டி.என்.பி.எஸ்.சி.,குரூப்~1 தேர்வு நடக்கிறது. 856 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கு, 2.56 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர், 1.80 லட்சம் பேர் இணையதளத்தில், 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதுவோர் ஆதார் எண் இணைக்க, கால அவகாசம் டிச., 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடந்த தேர்வில், முறைகேடுகளில் ஈடுபட்ட தேர்வாணையத்தை சேர்ந்த சிலர், சிறையில் உள்ளனர்.தேர்வு முறைகேடுகளை களைய, இரண்டு புதிய நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஓ.எம்.ஆர்., சீட்டில் தேர்வு எழுதுபவரின் முழு விபரங்கள் இடம் பெறுவதோடு, எத்தனை கேள்விகளுக்கு பதில் எழுதியுள்ளனர் என்று, தேர்வு மைய கண்காணிப்பாளர் சரி பார்த்து சான்றளிக்க வேண்டும்.
விடைத்தாள்களை கொண்டு செல்லும்போது, முறைகேடு தடுக்க விடைத்தாள்கள் அடங்கிய பெட்டிக்கு, 'ஜி.பி.எஸ்., லாக்' செய்யப்படும்.
இதற்காக, நியமித்த கட்டுப்பாட்டு அதிகாரியின் உத்தரவு இல்லாமல் பெட்டியை உடைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை.கொரோனா தொற்றை தடுக்க தேர்வு மையங்களில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, பாலசந்திரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment