பள்ளிகள் மீண்டும் திறப்பு - 95 சதவீத மாணவர்கள் வருகை
கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கேரளாவில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதில் 95 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு சட்டம் பிறப்பித்தது. இதையடுத்து நாடு முழுவதும் பள்ளிகளும் மூடப்பட்டன.
தற்போது கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் கடந்த 1-ந்தேதி 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் ஷிப்ட் அடிப்படையில் திறக்கப்பட்டன.
கேரளாவில் 2400 பள்ளிகள் மற்றும் 3,000 உயர் நிலை பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் 95 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
பள்ளிகளில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்திருந்தனர். மேலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கொரோனா தொற்று குறித்த பயம் விலகாததால் முழு அளவில் மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை.
இந்தநிலையில் கேரள கல்வி துறை மந்திரி ரவிந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறும் போது, நடப்பு கல்வி ஆண்டில் 1.75 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.
அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளதால் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறினார்.
No comments:
Post a Comment