மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, January 3, 2021

மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கவன ஈர்ப்பு போராட்டமாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.


2013 ஆண்டு முதல் முற்றிலும் அரசு நிதியில் இயங்கி வரும் அரசு ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியின் கல்வி கட்டணம் பிற அரசு மருத்துவக்கல்லூரி கட்டணத்தை விட 30 மடங்கு கூடுதலாக அரசு நிர்ணயம் செய்துள்ளதை எதிர்த்து மருத்துவ மாணவர்கள் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி வளாகத்தில் கடந்த டிச.9-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்


தமிழகஅரசு, அரசு மருத்துவக்கல்லூரிகளுக்கு இணையான கல்வி கட்டணத்தை ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரிக்கு கல்வி கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும் என  வலியுறுத்தி மருத்துவக்கல்லூர் மாணவர்கள், மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே ஒரு நாள் அடையாள உண்ணணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்

No comments:

Post a Comment